THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES

மாற்று திறனாளிகளுக்கு ரூ.1000 போக்குவரத்து படி

சென்னை: பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்களில் பணியாற்றும் மாற்று திறனாளி ஊழியர்களுக்கான போக்குவரத்து படியை ரூ.1000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணை: கைகால் பாதிக்கப்பட்ட, பார்வையற்ற மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து படியாக ஸி50 வழங்க 1989ல் அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. அந்த தொகை பிறகு 1993ல் ஸி75 என்றும் பின்னர் ரூ.150, 2009ல் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. இந்த தொகை ரூ.1000 ஆக உயர்த்தப்படும் என்று கடந்த 272010ல் அரசு உத்தரவிட்டது. இந்த உயர்வுத் தொகை பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்களில் பணியாற்றும் மாற்று திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. 1102010 முதல் இந்த தொகை கணக்கிட்டு வழங்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் “டாவோ”

சேவைத்துறையில் ஈடுபட்டிருக்கும் அரசுசாரா நிறுவனங்களை NGO (Non Government Organisation) என்கிறார்கள். இதைப்போலவே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைப்பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களை DPO (Disabled People Organisation) என்பார்கள். தமிழகத்தில் ஏராளமான என்.ஜி.ஓ.க்கள் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், டி.பி.ஓ.க்கள் மட்டுமே முழுக்க முழுக்க அவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக திட்டப் பணிகளை முன்னெடுப்பவை.

எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கப்போனால் என்.ஜி.ஓ.க்களை ஒப்பிடும்போது டி.பி.ஓ.க்கள் மிக மிகக் குறைவு. கேலிபர், ஆர்விக், அக்‌ஷயா போன்ற சில அமைப்புகள் தமிழக அளவில் டி.பி.ஓ.க்களாக சிறப்பாக செயல்படுகின்றன. தமிழகத்திலேயே அதிகளவில் (சுமார் 1,14,000) மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் மாவட்டம் என்பதால், கோவையை தலைமையகமாக கொண்டு இவர்களுக்கான அமைப்புகள் பலவும் இயங்குகின்றன.

இதுபோன்ற தன்னார்வ சேவை நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பு கோவையில் இருந்து செயல்பட்டு வருகிறது. டாவோ (DAVO – Disability Alliance of Voluntary Services) என்று அவ்வமைப்புக்கு பெயர். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக தன்னார்வு சேவை நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள, பயனர்களை அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு அமைப்பு இது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவைப்படும் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் சர்வதேச சேவை நிறுவனங்களிடம் வலியுறுத்துவதும் இவ்வமைப்பின் தலையாய பணிகளில் ஒன்று.

டாவோ அமைப்பின் கீழ் இயங்கும் UDIS (You and the Disabled) மன்றம் பல்வேறு செயல்பாடுகளை மாற்றுத்திறனாளிகளுக்காக செய்து வருகிறது.

“மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக ஹெல்ப்லைன் ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். தமிழகம் முழுக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பலரும் இந்த வசதியை பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள்” என்கிறார் இம்மன்றத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் சூரிய நாகப்பன்.

இந்த ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்பவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய – மாநில திட்டங்கள், பல்வேறு அமைப்புகளின் கல்வி மற்றும் இதர சேவைகள் ஆகியவை குறித்து வழிகாட்டப்படுகிறது. இவை மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை எப்படி பல்வேறு தளங்களில் இருந்து பெறுவது என்பதும் சொல்லித்தரப்படுகிறது. மறுவாழ்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகள் என்று எதைப்பற்றி கேட்டாலும் இங்கே நிச்சயம் பதில் கிடைக்கும்.

UDIS ஹெல்ஃப் லைன் எண்கள் :

0422 2405551 / 0422 2648006, +91 99445 56168

நன்றி : லக்கிலுக்

துபாயில் தமிழக மாற்றுத்திறனாளி மாணவனின் இசை நிகழ்ச்சி

Differently abled boy's music programme in Dubaiதுபாய்: துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி கடந்த 19-ம் தேதி மாலை அஸ்டோரியா ஹோட்டலில் நடைபெற்றது.

தமிழகத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (14). மனநலம் குன்றியவர். தனது இனிய குரலால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். சுமார் 2000-க்கும் மேற்பட்ட பாடல்களை மனனம் செய்துள்ளார். கீ போர்டு பயிற்சியும் எடுத்து வருகிறார்.

அவரது இசை நிகழ்ச்சி கடந்த 19-ம் தேதி மாலை துபாயில் உள்ள அஸ்டோரியா ஹோட்டலில் நடந்தது. இந்த இன்னிசை விருந்தில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தனது மனைவியுடன் கலந்துகொண்டார். பின்னர் பேசிய அவர் இது போன்றவர்களை நாம் அனைவரும் உற்சாகப்படுத்தி ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்த இந்திய சமூக நலக் கமிட்டியின் தலைவர் கே. குமாரையும் பாராட்டினார்.

இந்திய, பாகிஸ்தானியப் பாடல்கள், பாப், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு பாடல்களைப் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

இது மட்டுமல்லாது சிறப்புக் குழந்தைகளுக்கான சமூக நல அமைப்பான சாதி, துபாய் கைராலி கலா மன்றம், பல்வேறு தமிழ் மற்றும் கேரள அமைப்புகள், 94.7 எஃப்.எம். உள்ளிட்டவற்றிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

கார்த்திக்கின் பள்ளியிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த கலை நிறுவன விருதுக்காக பாடல் அனுப்பப்பட்டிருந்தது. எனினும் அமெரிக்கா செல்ல இயலாத சூழலினால் அது கைகூடவில்லை.

கார்த்திக்கிற்கு அவரது சகோதரர் விக்னேஷ், பெற்றோர்கள் மற்றும் பாட்டி பெரும் ஆதரவாக இருக்கிறார்கள்.